Wednesday, February 20, 2019

என்னை தெரியவில்லை

எனது அதி நவீன கைப்பேசி
என்னை யாரென்று கேட்டவாறு உள்ளது,
எனது முகமோ கைரேகை யோ
அதற்கு அன்னிய மாய் தெரிகிறது,
புத்துநோய் சார்ந்த மருந்துகள்
உன்னை எல்லோருக்கும் அந்நிய மாய்
செய்து விடும் என்று கைபேசிக்கு பாவம் தெரியாது.

Tuesday, December 11, 2018

Crab story

Crab stories can be love stories too
When crabs strike you hard,
Love    oozes  from nooks and  corners,
This solution of love flushes all crabs away,
For ever and aye.

Thursday, March 1, 2018

அன்பின் மொழி

ஆறே மாதமான குட்டி பையன்
 ஓயாமல் பேசுகிறான் -
அம்மா"உம் " கொட்டியவாறே வேலை செய்கிறாள் .

அம்மாவின்"உம் "சத்தம் அவனை மேலும் பேச வைக்கிறது ,
அவனது பப்பா ,இச்ச  எல்லாமே அவளுக்கு மட்டும் புரிகிறது .
அவளுக்கு புரிய வைத்துவிட்டதால் அவன் தைரியமாக இன்னும் பேசுகிறான் .

மொழியின் பூட்டை மன சாவியால் திறக்கும் ஜாலம்  அங்கு அரங்கேறுகிறது -
ஒரு வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் பேச்சுக்களுக்கான ஒத்திகையும் !Monday, January 16, 2017

விட்டலன் வரும் நேரம்                                

விட்டலன் என் வீடு தேடி வரும் நேரம் இது ,
இடுப்பில் கை வைத்து அவன் தர்க்கம் செய்வானோ  ?
செங்கல்லில் ஏறி நின்ற அவன் 
என் வீட்டு சோபாவில் ஏறி  நிற்பானோ ?
மாயா வலைகளில் இருந்து என்னை விடுவித்து செலவானோ ,
வெண்ணை திருடி என் பக்கத்தில் ஒளிவானோ ,
வர தாமதம் செய்ததால் மாயையை என் முன் நிறுத்திவிட்டு அவன் மட்டும் ஒளிவானோ ?
அவனோ மாயன் அவனை யார் அறிவார் ?
ஆனால் விட்டலன் என் வீடு வரும் நேரம் இது 

Friday, October 14, 2016

The WaitDream it has been 
A long deep dream,
To take a good bath in that azure sea before me.

That blue perennial vastness has always been a friend,
Murmuring soothing things in my ears,
Never forsaking me even in my sleep;
I always waited to have my bath.

What are you waiting for ?
Many a times my blue friend would ask,
I always gave the same answer-
"Me waiting for the waves to subside"
With a greater blast of waves the sea would recede.

Years rolled by-
My wait never ended,
I saw with wide eyes-Chinnu and Minnu born decades later-
wade through the length and breadth of my  blue friend.

My friend is no more a friend now 
Sarcasm seems to rule his every glance-
"A watcher on the shore can never be a swimmer
Or ever bathe in the vast sea" - he says
"You were born to wait and watch and die!"

Faith is the thread of all relationship'
People who wait for waves to subside can never be a friend of the sea.
I learned it the hard way .
Helplessly I watch Chinnu and Minnu march into the seas with their grand kids.


Monday, December 7, 2015

மழை அறிவு

மனிதம் வெளிவர மழை வரவேண்டும் 
ஆழி மழை ஊழி மழை 
உன்னையும் என்னையும் பாழும் கிணற்றில் தள்ளும் மழை ..

தினமும் பார்க்கும் எவரும் எனக்கு சொந்தமல்ல 
என் குட்டி வீட்டுக்குள் என் உலகம் தீர்ந்துவிடும் ,
அடுத்த வீட்டு குழந்தை ஓயாமல் அழுதாலும் ஏன் 
என்று நான் கேட்டதே இல்லை -
இந்த பாழாய் போன மழை வரும் வரை .

இன்று தொலைந்து போன குழந்தைகளின் -
ஒவ்வொரு புகைப்படமும் 
எந்த தாய் தூக்கம் தொலைக்கிறாள் 
என்று பதைக்க வைக்கிறது .

வெளியே இருக்கும் இன்னொரு உலகை 
ஆழி மழை அறிமுகம் செய்தது 
கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர்களை கடக்க 
ஏனோ மழை வர வேண்டிஉள்ளது .