Wednesday, March 7, 2012

மகளிர் தினம்

மகளிர் தின வாழ்த்துக்கள்
வாழ்த்து அட்டையிலும் 
கைபேசியிலும் கணினியிலும்
குவிந்தவண்ணம் உள்ளன .

எதை கொண்டாடுகிறோம் ?
எதற்கு வாழ்த்தப்படுகிறோம்?
பெண்ணாய்  பிறந்தோமே அதற்காகவா ?
அல்லது பெண்ணை சுமத்து பெற்றோமே அதற்காகவா ?
இவை இரண்டிற்குமே வாழ்த்தப்பட வேண்டியது ஆணை அல்லவா?

பெண்குழந்தை பிறந்ததும்
ஆறுதல் தொனியில் வாழ்த்துக்களும்
சாதனை ஆண்களுக்கு வாழ் நாள் சாதனையாக
ஒரு பெண்ணை வளர்ப்பது என்று ஆன பின்னர்,
மகளிர் தினத்தில் தனியாக எதை வாழ்த்துகிறார்கள் ?
ஓ எல்லா தொனிகளும் புரிந்தாலும்
எதுவுமே புரியாத மாதிரி வெளி வரும்
அந்த பெண்களின் புன்னகைக்கு தானோ
இத்தனை வாழ்த்துக்களும் !!!!


No comments:

Post a Comment