மறுத்து பேச ஆசை

வெட்டி அதிகாரங்களை மறுத்து பேச ஆசை
நீளும் நாட்களை வெட்டி விட ஆசை
காலுறைகளும் கையுறைகளும் ,
முகமூடிகளும் கிழித்து விட ஆசை .

எழுதப்படாத சட்டங்களை ஒழித்துவிட  ஆசை
பேசப்படாத வார்த்தைகளை நொறுக்கிவிட ஆசை ,
ஒட்டாத உறவுகளில் இருந்து ஓடிவிட ஆசை ,
கண்ணில் படாத சங்கலிகளை அறுத்து  விட ஆசை .

ஆசைகள் ஆயிரம் இருந்தும் இவ்வுலகில் -
வெறும் ஆசைகளை அசை போடும் ஆவாக
ஆனபின்னர் சீக்கிரம் அசையாமல் ஆகிவிட ஆசை .

Comments

Popular Posts