தனி மர பயணம்

 
அது ஓர் புனித பயணம்
வேர்களை நோக்கி ஒரு நேசப்பயணம் ,
வேர்கள் இல்லாமல் விழுதுகள் கிடையா -
ஆயினும் அதிசயங்களுக்கு இவ்வுலகில்
கொஞ்சமும் பஞ்சம் இல்லை !
 
குட்டி செடியின் பட்டுவேர்கள்
ஓட்ட வெட்டப்பட்ட பின்னும் ,
காத்திலும் ,மழையிலும் வெயிலிலும் 
நோவுகளை தன்னகத்தே வாங்கி 
அதையே  உரமக்கிகொண்டு,
குட்டி செடி பூத்து ,காய்த்து மரமான விந்தை தான் என்ன ?
 
மரம் தோப்பான பின்னும் ,தன் வேருக்கு ஆன
ஏக்கம்  ஒவ்வொரு அணுவிலும் நிறைய ,
தன் புனித பயணத்தை மேற்கொண்டது 
அந்த தோப்பான தனி மரம் .
 
வேர்களின் ஊரில் ஒரு திடீர் பஞ்சாயத்து -
அயிந்து தச வருடங்கள் போயும்
வேரை தேடி வந்த வேந்தனை இரு கை நீட்டி
இறுக தழுவின பழுத்த பெரும் மரங்கள் .
இது என்ன மாயமா மந்திரமா?
வேர் இல்லாமல் ஒரு மரமா ?
அது ஒரு தோப்பும் ஆனதா?
எப்படி சாத்தியம் இந்த அதிசயம் ?
வேர்களின் ஊரின் தெய்வங்கள் சிரித்தது செப்பின -
வெட்டப்பட்ட வேர் தாய் வேர்
அதை சுற்றிலும் இருந்த ஈரம் மட்டும் போதும்,
மரத்தை தோப்பாக்கவோ காடாக்கவோ மாற்றும்
வல்லமை கொண்ட ஈரம் அது .
 
தாய்மையின் ஈரம் குட்டி செடியை
அடர்ந்த வானமாக்கும் தன்மை கொண்டது ,
ஏ மரமே உன் பயணத்தின் காரணமும்
அந்த அழகான நிறைந்த ஈரம் தான் !!
 

Comments

Popular Posts