என் வீட்டு அழகிகள்
என் வீட்டு புகைப்படத்தில் சிரிக்கும் அழகிகள்
எப்பொழுதும் என்னை விரட்டியபடி உள்ளனர் ,
அவர்கள் முன்னே நான் என்றும் எதோ
குறையுடன் இருப்பதாகவே உணர்கிறேன் .
வருடக்கணக்காக என்னை இயக்கும்இவர்கள் முன்
நானும் அழகியாக எவ்வளவோ முயற்சிகள்செய்த வண்ணம்
நாட்களை ஓட்டுகிறேன் -
ஆயினும் இவர்கள் அழகோ என்றும் எனக்கு
எட்டாக்கனி ஆகவே உள்ளது .
குழந்தைக்காக உயிர் விட்ட அவர் தாயும்
தன் உயிரே குழந்தைகளாக இருந்த என் தாயும்
ஒவ்வொரு கணமும் பிரபஞ்ச அழகிகளாக
என் வீட்டு புகைப்படத்தில் சிரிப்பதால் ,
அவர்கள் அழகினை எட்டிப்பிடிக்கும் முயற்சிகளில்
என் நாட்களும் ,மாதங்களும் ,வருடங்களும் கரைகிறது .
Comments
Post a Comment