வானப்ரஸ்தம் .

உன்  உண்ணலும் உறங்கலும் 
என்னை ஒன்றும் செய்யாவிடில் 
நீயும் நானும் தனி மனிதர்கள் .

நீ நீயாகவும் நான் நானாகவும் இருக்க 
பிறப்போ வளர்ப்போ இடையினில் வராவிடில் 
உனக்கும் எனக்கும் உறவுதான் என்ன ?

ஆதி மனிதர்கன் மனச்சுமையை ஒருவர் மேல் ஒருவர் 
இறக்கி வைத்தார்களா ?
மரமும் புலியும் நாயும் நண்டும் 
வாழும் வாழ்க்கையே அழகென நினைத்தால் 
மனிதர்கள் பிறந்த உலகம் கேவலமா ?

கூடிவாழ்தலும் கோடி நன்மையும் 
தீரா  தலை வலி ஆனவர்க்கு 
தேடி வந்த சொர்க்கம் தானோ 
இந்த வானப்ரஸ்தம் .

Comments

Popular Posts