மழை அறிவு

மனிதம் வெளிவர மழை வரவேண்டும் 
ஆழி மழை ஊழி மழை 
உன்னையும் என்னையும் பாழும் கிணற்றில் தள்ளும் மழை ..

தினமும் பார்க்கும் எவரும் எனக்கு சொந்தமல்ல 
என் குட்டி வீட்டுக்குள் என் உலகம் தீர்ந்துவிடும் ,
அடுத்த வீட்டு குழந்தை ஓயாமல் அழுதாலும் ஏன் 
என்று நான் கேட்டதே இல்லை -
இந்த பாழாய் போன மழை வரும் வரை .

இன்று தொலைந்து போன குழந்தைகளின் -
ஒவ்வொரு புகைப்படமும் 
எந்த தாய் தூக்கம் தொலைக்கிறாள் 
என்று பதைக்க வைக்கிறது .

வெளியே இருக்கும் இன்னொரு உலகை 
ஆழி மழை அறிமுகம் செய்தது 
கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர்களை கடக்க 
ஏனோ மழை வர வேண்டிஉள்ளது .
















Comments

Popular Posts