விட்டலன் வரும் நேரம்
விட்டலன் என் வீடு தேடி வரும் நேரம் இது ,
இடுப்பில் கை வைத்து அவன் தர்க்கம் செய்வானோ ?
செங்கல்லில் ஏறி நின்ற அவன்
என் வீட்டு சோபாவில் ஏறி நிற்பானோ ?
மாயா வலைகளில் இருந்து என்னை விடுவித்து செலவானோ ,
வெண்ணை திருடி என் பக்கத்தில் ஒளிவானோ ,
வர தாமதம் செய்ததால் மாயையை என் முன் நிறுத்திவிட்டு அவன் மட்டும் ஒளிவானோ ?
அவனோ மாயன் அவனை யார் அறிவார் ?
ஆனால் விட்டலன் என் வீடு வரும் நேரம் இது
Comments
Post a Comment