அன்பின் மொழி

ஆறே மாதமான குட்டி பையன்
 ஓயாமல் பேசுகிறான் -
அம்மா"உம் " கொட்டியவாறே வேலை செய்கிறாள் .

அம்மாவின்"உம் "சத்தம் அவனை மேலும் பேச வைக்கிறது ,
அவனது பப்பா ,இச்ச  எல்லாமே அவளுக்கு மட்டும் புரிகிறது .
அவளுக்கு புரிய வைத்துவிட்டதால் அவன் தைரியமாக இன்னும் பேசுகிறான் .

மொழியின் பூட்டை மன சாவியால் திறக்கும் ஜாலம்  அங்கு அரங்கேறுகிறது -
ஒரு வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் பேச்சுக்களுக்கான ஒத்திகையும் !



Comments

Popular Posts